உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அமைச்சர் வீட்டில் ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

அமைச்சர் வீட்டில் ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

ஒட்டன்சத்திரம்: ''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கவில்லை,'' என ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: ஐ.பெரியசாமி வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது சம்பந்தமாக இந்த அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அ.தி.மு.க., கூட்டணிக்கு அதிக கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அ.தி.மு.க.,வினர் தி.மு.க., வில் இணைவர் என்று கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க., வில் என்றைக்கும் அ.தி.மு.க. வினர் இணைய மாட்டார்கள். இன்றைக்கு புதிதாக தி.மு.க.,வில் இணைந்தவர்களின் சரித்திரம் என்னவென்று அவர்களுக்கு தெரியும்.அரசியல் கட்சி துவங்குவது அவரவர் இஷ்டம். வரும் தேர்தலுக்குப் பிறகு தான் மக்களுடைய சக்தி விஜய்க்கு இருக்கிறதா என தெரிய வரும். மாநாடு நடத்துவதும் அவரவர் விருப்பம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை