ரயிலடி சித்தி விநாயகர் கோயில் கும்பாபிேஷகம்
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் கும்பாபிேஷகம் விழா மார்ச் 14 ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜைகளுடன் தொடங்கின. 15ம் தேதி காலை கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தன பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு முதல்கால, 2 ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜையில் வேதபாராயணம், பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது. நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. சித்தி விநாயகர், கைலாசநாதர், ஆனந்த வல்லி தாயார், ஆஞ்சநேயர், தாண்டாயுதபாணி, வள்ளி ,தெய்வானை,ஸ்ரீசுப்பிரமணியர், நவகிரகங்கள், பைரவர் சன்னதி கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய அனைத்து மூலஸ்தானத்திலும் அபிஷேகம் நடைபெற்றது. திண்டுக்கல் சிவபுரம் ஆதினம் 57 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ,சுபம் பேப்ரிக்ஸ் சிவராம்,பாலாஜி ,பி.என்.சி .தர்ம சாஸ்தா டிரஸ்ட் தலைவர் லோகநாதன் ,செயலர் அழகர்சாமி , பொருளாளர் பாலமுருகன், ஆடிட்டர் அழகர்சாமி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் , சிவாச்சாரியார் கைலாசம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
உதவி ஆணையரால் அதிருப்தி
கோயில் கும்பாபிஷேக விழாக்களில் நன்கொடையாளர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் முக்கிய பிரமுகர்கள் கோயில் மண்டபத்தில் ஏறுவதற்கு அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமி மாலா தடை விதித்தார். ஆனாலும் அமைதி காத்த பக்தர்கள் கட்டட உறுதிச் சான்று இல்லை என உதவி ஆணையர் அளித்த பதிலால் விரக்தியடைந்தனர். அறநிலையத்துறைக்கு வேண்டிய சிலரை மட்டும் மேலே ஏற அனுமதி அளித்தனர். அனைத்து சலுகைகளும் பெறும் அறநிலையத் துறை அதிகாரிகள் தங்களுக்கு அணிவிக்கப்படும் மாலை கூட கோயில் திருப்பணிக்காக மக்கள் அளிக்கும் நன்கொடையில் வாங்கப்பட்டதை மறந்து அதிகாரம் செய்வதாக பக்தர்கள் முணுமுணுத்தனர்.