உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னறிவிப்பின்றி 8 மணி நேரம் மூடப்பட்ட ரயில்வே கேட் வாகன ஓட்டிகள் அவதி

முன்னறிவிப்பின்றி 8 மணி நேரம் மூடப்பட்ட ரயில்வே கேட் வாகன ஓட்டிகள் அவதி

திண்டுக்கல்: திண்டுக்கல் - திருச்சி ரோட்டிலிருந்து ஜி.டி.என்.ரோட்டிற்கு செல்லும் ரயில்வே கேட் நேற்று முன்னறிவிப்பின்றி 8 மணி நேரம் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.திண்டுக்கல் - திருச்சி ரோட்டிலிருந்து ரவுண்ட் ரோடு, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், சிலுவத்துார், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல ஏராளமான வாகன ஓட்டிகள் ஜி.டி.என்., ரோட்டை பயன்படுத்துகின்றனர். அங்கிருந்து திருச்சி ரோட்டிற்கு வருவோரும் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். ஜி.டி.என்.,ரோட்டில் பழநி மார்க்கமாக செல்லும் ரயில்கள் செல்வதால் ரோட்டின் குறுக்கே ரயில்வே கேட் உள்ளது. ரயில் செல்லும் போதெல்லாம் கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த ரோட்டில் 2 தனியார் பள்ளிகள் செயல்படும் நிலையில் ஏராளமான மாணவர்கள் இவ்வழியாக செல்கின்றனர்.நேற்று காலை 9:30 மணி முதல் ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில்வே கேட் தண்டவாள பகுதியில் முன்னறிவிப்பில்லாமல் பேட்ஜ் ஒர்க் பணியை துவங்கினர். இதனால் மாலை 5:00 மணி வரை 8 மணி நேரம் ஜி.டி.என்.,ரோட்டை பயன்படுத்தும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். ரயில்வே நிர்வாகம் முன்னறிவிப்பின்றி ரயில்வே கேட்டை மூடி பணிகள் செய்வதை தவிர்க்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.ரயில்வே பொறியாளர் ரகுமான் கூறியதாவது: ரயில்வே கேட்டில் பணி செய்ய போகிறோம் என நேற்று முன்தினமே திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷன், ஜி.டி.என்.ரோட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கடிதம் கொடுத்துள்ளோம். மக்களுக்காக தான் சீரமைப்பு பணிகளை செய்து வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
நவ 13, 2024 20:40

ஸ்டிக்கர் ஓட்டும் அரசு அதில் தான் மிக கவனம். போலீஸு அறிவிப்பை நாற்காலி துடைக்கும் காகிதமாக நினைய்து தூக்கி போராட்டிருக்கும் பள்ளி நிராவகம் அலட்சி போக்கு கண்டிக்க படவேனும்