ரயில்வே கேட் நாளை மூடல்
வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கும் நத்தம் ரோடு லெவல்கிராசிங் கேட் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (டிச.19) காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மூடப்படுகிறது. இவ்வழியை பயன்படுத்துவோர் வடமதுரை போஜனம்பட்டி, செங்குளத்துப்பட்டி ரோடுகளில் இருக்கும் கேட்டுகள், வேல்வார்கோட்டை 'சப் வே' வழியே ரயில் பாதையை கடந்து மறுபக்க பகுதி ஊர்களுக்கு செல்லலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.