உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அய்யலுாரில் ரயில் பாதை மேம்பாட்டு பணி

 அய்யலுாரில் ரயில் பாதை மேம்பாட்டு பணி

வடமதுரை: அய்யலுாரில் ரயில் பாதையை பலமாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட 60 கேஜி தண்டவாளத்திற்குரிய 'பாயின்ட்' கட்டமைப்பு பொருத்தப்பட்டது. விழுப்புரம் - திண்டுக்கல் இருவழி ரயில் பாதை பணி 2012ல் துவங்கி 2018 ல் முழுமையானது. இருவழி பாதை பணியில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதை 60 கேஜி தண்டவாளங்களாக பயன்படுத்தப்பட்டன. அதாவது 'கேஜி' என்பதால் பொருள் ஒரு மீட்டர் நீள துண்டு 60 கிலோ கொண்டது என்பதாகும். முன்னர் இருந்தவை 52 கேஜி தண்டவாளங்களாகும். இந்நிலையில், பாதுகாப்பில் மேம்பட்டதாக சில நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட 60 கேஜிக்குரிய 'பாயின்ட்' அமைப்புகளாக மாற்றும் பணி அய்யலுாரில் நடந்தது. ரயில் பாதையிலும், தரையிலும் செல்லக்கூடிய 2 கிரேன்கள், டிராலிகள், மண் தள்ளும் இயந்திரங்கள் பயன்படுத்தி புதிய 'பாயின்ட்' கட்டமைப்பு 650 மீட்டர் துாரத்திற்கு தண்டவாளத்திலேயே கொண்டு சென்று பொருத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை