உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை பூங்காக்களில் பூத்துள்ள மலர்களை அச்சுறுத்தும் மழை

கொடை பூங்காக்களில் பூத்துள்ள மலர்களை அச்சுறுத்தும் மழை

கொடைக்கானல்:கொடைக்கானலில் தொடர் மழை பெய்வதால் பூங்காவில் பூத்துள்ள மலர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடை சீசனுக்காக லட்சக் கணக்கான பயணிகள் வருவது வழக்கம். மலர் கண்காட்சி , கோடை விழா பயணிகளை மகிழ்விக்கும். 62 வது மலர்கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்கா மலர் படுகைகளில் பல வண்ணங்களில் பூக்கள் பூத்துள்ளன. இம்மாத துவக்கம் முதலே மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கூடுதல் மழையால் பூக்கள் உதிர்வது, மொட்டு, இலைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதையடுத்து பிரையன்ட் பூங்காவில் பூக்கள் பாதிக்காமல் இருக்க மழையின் போது பாலிதீன் போர்வை போர்த்தப்பட்டு வருகிறது. பூஞ்சாண பாதிப்பு ஏற்படாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vqd7v0qq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நடராஜன் கூறுகையில்,''தொடர் மழை பெய்யும் நிலையில் பூக்களை பாதுகாக்க பாலிதீன் போர்வை,வடிகால் வசதி, பூஞ்சாண பாதிப்பு ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்றபடி தொடர் மழை நீடித்தால் பூ இதழ், இலை பாதிப்பு ஏற்படலாம். இயற்கை ஒத்துழைப்பும் அவசியம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ