உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் ராமநவமி வழிபாடு; பக்தர்கள் தரிசனம்

கோயில்களில் ராமநவமி வழிபாடு; பக்தர்கள் தரிசனம்

நத்தம் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ராமநவமி வழிபாடு நடந்தது.கோவில்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.ராமஜென்ம பூஜை வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் குட்டூர்- அண்ணாமலையார், அசோக்நகர் பகவதி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.வடமதுரை : வடமதுரை பஜனை மடத்தில் இருந்து ராமர் பட ரத ஊர்வலம் புறப்பட்டு சவுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு சென்றது. அங்கிருந்து நான்கு ரத வீதிகள் வழியே திருச்சி ரோடு ராமதுாது பக்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்தது. சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஒட்டன்சத்திரம் : சாமியார்புதுார் சாய்பாபா கோயிலில் சீரடி சாய்பாபாவுக்கு ஆரத்தி, ஊஞ்சல் சேவை, அபிஷேகம், வழிபாடு நடந்தது. அன்னதானமும் நடந்தது. மோகனாம்பட்டி சாயி பிருந்தாவனத்தில் குபேர சாய் பாபா திருக்கோவிலில் ருத்ர ஜெப, விஷ்ணு பாராயணம் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை நடந்தது. காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ