மேலும் செய்திகள்
பழநி கிரி வீதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
12-Dec-2024
பழநி: பழநி கொடைக்கானல் சாலை சந்திப்பு அருகே உள்ள கிரிவீதி சிவகிரிபட்டி பைபாஸ் இணைப்பு சாலை ஆக்கிரமிப்பை போலீசார் ,நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதால் கடைக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.பழநி கிரிவீதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி தனியார் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்பட்டன. இந்நிலையில் கிரிவீதி பகுதி கடை வியாபாரிகளுக்கு மாற்று இடம் அறிவிக்காத நிலையில் இடும்பன் இட்டேரி ரோடு, குறவன் பாறைரோடு, கொடைக்கானல் ரோடு சந்திப்பிலிருந்து கிரி வீதி செல்லும் சாலையில் கடை அமைத்திருந்தனர்.கொடைக்கானல் ரோடு சந்திப்பிலிருந்து கிரிவீதி செல்லும் சாலை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் ,நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டு கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால் பாதிப்படைந்த கடைக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.
12-Dec-2024