உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தென்னம்பட்டியில் விபத்து பள்ளம் சீரமைப்பு

தென்னம்பட்டியில் விபத்து பள்ளம் சீரமைப்பு

வடமதுரை : ''தினமலர் செய்தி எதிரொலியாக தென்னம்பட்டி பகுதி நெடுஞ்சாலை விபத்து பள்ளம் சீரமைக்கப்பட்டது.வடமதுரை ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை விரிவாக்கம் முன்பு ரோடு விளம்பில் பல இடங்களில் காவிரி குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டன. இதற்கான அமைக்கப்பட்ட கேட் வால்வுகளை சில இடங்களில் அகற்றி ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் சில இடங்களில் ரோட்டின் கீழ் செல்லும் குழாய் பாதையில் உடைப்பு ஏற்பட்டு நீர் கொப்பளிப்பது வாடிக்கையாக உள்ளது. தென்னம்பட்டி கோட்டைகட்டியூரில் குழாய் பாதை உடைந்து நீர் வெளியேறியதில் பள்ளம் உருவானது .வாகனங்களுக்கு விபத்து ஆபத்தாக இருந்தது. இதுதொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து அப்பகுதி பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறையினர் கான்கீரிட் கலவை பயன்படுத்தி செப்பனிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை