உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடு சேதம்... கழிவுநீர் ஊற்று...பொழுதுபோக்குக்கு வழியில்லை... நொந்து நுாடுல்ஸ் ஆன எஸ்.எஸ்.நகர், விஜயமாதவன் நகர் குடியிருப்போர்

ரோடு சேதம்... கழிவுநீர் ஊற்று...பொழுதுபோக்குக்கு வழியில்லை... நொந்து நுாடுல்ஸ் ஆன எஸ்.எஸ்.நகர், விஜயமாதவன் நகர் குடியிருப்போர்

திண்டுக்கல்: சேதமடைந்த ரோடுகள், அந்த ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர், பொழுதுபோக்குக்கு வழி இல்லாத நிலை , முறைப்படி விண்ணப்பித்தும் காவிரி நீர் குழாய் இணைப்பில் அலட்சியம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதர மையம் அருகில் இல்லாத நிலை என அடுக்கடுக்கான குறைகளால் எஸ்.எஸ்.நகர், விஜயமாதவன் நகர் குடியிருப்போர் நொந்து நுாடுல்ஸ்' ஆகி உள்ளனர்.திண்டுக்கல் மாலைப்பட்டி ரோட்டிலுள்ள எஸ்.எஸ்.நகர், விஜயமாதவன் நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் சிவஞானம், துணைச் செயலாளர் சிவபிரகாசம், இணை ச்செயலாளர் ராஜகோபால், பொருளாளர் மாடசாமி, செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், செல்வராணி, ராஜேஸ்வரி கூறியதாவது : எஸ்.எஸ்.நகர் மெயின் ரோடு சேதமடைந்து வாகன பயணத்தை விபத்துக்குள்ளாக்கி வருகிறது. பல மாதங்களாக தீர்க்க முடியாத பிரச்னையாக்கி எஸ்.எஸ்.நகர் 7 வதுசந்தின் சாக்கடை அடைப்பை காணாமல் விட்டுள்ளது அடியனுாத்து ஊராட்சி நிர்வாகம். சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஆறாக பாய்வதால் நோய்தொற்று அபாயம் பெருகியுள்ளது. கழிவுநீரை கடந்துதான் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்ற சூழலில் எஸ்.எஸ்.நகர் தெருக்களில் கழிவுநீரின் ஆதிக்கம் உள்ளது. சாக்கடைகள் துார்வாரப்படாததால் தேங்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி வீட்டிற்குள் படையெடுக்கிறது.

தெருவில் விளையாடும் குழந்தைகள்

துாய்மை பணியாளர்களின் சேவையில் விதிவிலக்கான பகுதியாக எங்கள் பகுதி உள்ளதால் குப்பை, சாக்கடை பிரச்னைகள் ஒருசேர வந்து எங்களை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது.விஜயமாதவன் நகரின் கடைசியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அடிப்பகுதியும், அருகிலுள்ள டிரான்ஸ்பார்மர் பாதுகாப்பின்றி உள்ளது. இதற்கு கம்பி வேலியிட்டு தடுப்புகள்அமைத்தால் எதிர்கால விபத்து தடுக்கப்படும் என்ற நிலை உள்ளது. பொழுதுபோக்கு கூடமான பூங்காவோ, நடைப்பயிற்சி மையமோ இல்லாமல் உள்ளதால் இந்த பகுதி குழந்தைகள் தெருவில் விளையாடும் நிலை உள்ளது. விபத்து அபாயம் பெருகியுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக நுாலகம், குழந்தைகளுக்கான பூங்கா வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். ரோடுகள் போடப்பட்டு பல ஆண்டுகளாவதால் கற்கள் பெயர்ந்து வாகன டயர்களில் சிக்கி தெறிக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது.

பாராமுகமாக ஊராட்சி

விஜயமாதவன் நகர் முதல் மூன்று தெருக்களிலும் உள்ள 16 வீடுகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டஇணைப்பு பல ஆண்டுகளாக தாமதமாவதால் குடியிருப்போர் மனரீதியாக மிகவும் பாதிப்படைந்து உள்ளனர். அங்கன்வாடி மையமும், ஆரம்ப சுகாதார நிலையமும் கூட அருகில் இல்லாமல் நத்தம் ரோடு சந்திப்பில் உள்ளதால் அலைச்சல் ஏற்படுகிறது. குறைகளை அடியனுாத்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பாராமுகமாக உள்ளதால் மனதளவில் குடியிருப்போர்கள் சலிப்படைந்து கிடக்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்