குப்பை கிடங்காக ரோட்டோரங்கள்...தீ வைப்பதால் புகை
திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பது காலகாலமாக தொடர்கிறது .அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் குப்பை கிடங்கு வசதி இல்லாததால் இங்கு வந்து கொட்டுவதோடு தீ வைத்து எரிக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.இதன் காரணமாக புகை உருவாக வாகனங்களில் செல்வோர் பாதிக்கின்றனர்.அருகில் உள்ள குடியிருப்போரும் சுவாச கோளாறு பிரச்னைகளால் பரிதவிக்கின்றனர்.இதன் மீது மாவட்ட நிர்வாகம்தான் தனி கவனம் செலுத்த வேண்டும்.