மேலும் செய்திகள்
பழநியில் கூட்டம்
28-Jul-2025
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ரோப் கார் பராமரிப்பு பணியை தொடர்ந்து எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பழநியில் முருகன் கோயிலுக்கு சென்று வர படிப்பாதை, வின்ச், ரோப் கார் சேவைகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மூன்று நிமிடங்களுக்குள் முருகன் கோயிலுக்கு சென்று வர ரோப்கார் சேவை பயன்படுகிறது. ஜூலை 15 முதல் ரோப் கார் நிறுத்தப்பட்டு வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடந்தன.நேற்று பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. பெட்டிக்கு 300 கிலோ வீதம் எடை கற்கள் வைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. நாளை முதல் ரோப்கார் சேவை துவங்கும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
28-Jul-2025