பழநியில் இன்று ரோப்கார் நிறுத்தம்
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (அக்.31)நடக்கிறது. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் ரோப் கார் இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழநி முருகன் கோயில் சென்றுவர வின்ச், படி பாதை, யானைப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.