விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.23 லட்சம்
திண்டுக்கல்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் தாலுகா கீழையூர் கிராமம் பொங்கமேட்டு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் லேப் டெக்னீஷன் ஓம்பிரகாஷ் 37. 2022 ஜன., இரவு 11:00 மணிக்கு திண்டுக்கல் - திருச்சி மெயின் ரோட்டில் வெள்ள பொம்மைப்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஓம்பிரகாஷ் மீது மோதியது. இதில் அவர் இறந்தார். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட சமரச தீர்வு மையத்தில் விசாரணைக்கு வந்ததில் ஓம்பிரகாஷ் தாய், தந்தை இருவருக்கும் தலா ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.23 லட்சம் இழப்பீடு வழங்க,தனியார் காப்பீட்டு நிறுவனம் சம்மதம் தெரிவித்ததையடுத்து வழக்கில் தீர்வு காணப்பட்டது.