உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலாளிக்கு ஆயுள் சிறுமிக்கு ரூ.5லட்சம் இழப்பீடு

தொழிலாளிக்கு ஆயுள் சிறுமிக்கு ரூ.5லட்சம் இழப்பீடு

திண்டுக்கல்: 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி சத்திய தாரா, சிறுமி குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.5லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். அனுமந்தராயன் கோட்டை அருகே செவக்காடு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சந்தியாகு 51. புல் அறுப்பதற்காக தாயுடன் வந்த 9 வயது சிறுமியை மோட்டார் பம்பு செட் அறைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். சாணார்பட்டி மகளிர் போலீசார் சந்தியாகுவை கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கறிஞர் மைதிலி வாதாடினார். சந்தியாகுவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்திய தாரா தீர்ப்பளித்தார். இதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை