மேலும் செய்திகள்
தி.மு.க., முகவர்கள் கூட்டம்
10-Nov-2024
நத்தம்; நத்தம் அரசு மண்டபத்தில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடு நடந்தது. வட்டார தலைவர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி, வட்டார செயலாளர் கருப்புசாமி, பொருளாளர் சுகன்யா,துணை தலைவர்கள் வனிதா, முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர். கொரோனா காலத்தில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கும், ஊராட்சி தொழிலாளர்களுக்கும் கொரோனா உதவித் தொகை உடனடியாக வழங்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர். இணைச் செயலாளர் ஜெயராம் கலந்து கொண்டார்.
10-Nov-2024