உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இடையகோட்டையில் சந்தன உருஸ்

இடையகோட்டையில் சந்தன உருஸ்

இடையகோட்டை: இடையகோட்டை முஹையத்தீன் ஆண்டவர் தர்ஹாவில் நடந்த சந்தன உருஸ் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முஹையத்தீன் ஆண்டவர் தர்ஹா சந்தன உருஸ் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா செப்.23ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அக்.2ல் வாசனை மாலை ஊர்வலம் நடந்தது. அக்.3 முதல் 5 வரை சந்தன உருஸ் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை சந்தனம் வழங்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து புனித கொடி இறக்குதல் நடந்தது. விழா நாட்களில் இஸ்லாமிய இன்னிசை கச்சேரியுடன் கண்கவர் வானவேடிக்கை நடந்தது. பரம்பரை முத்தவல்லி எஸ்.ஒய். சையது மீரான் தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ