துாய்மைப்பணியாளர் நல வாரியம் ரூ.4.37 கோடி உதவி தலைவர் ஆறுச்சாமி தகவல்
திண்டுக்கல்:'' துாய்மைப்பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.4 கோடியே 37 லட்சத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது'' என அதன் தலைவர் ஆறுச்சாமி கூறினார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : துாய்மைப்பணியாளர்கள் நலவாரியத்தில் கையிருப்பாக ரூ.40 கோடி உள்ளது. வேறு துறைக்கு இந்த பணத்தை ஒதுக்க கூடாது. முழுவதும் பணியாளர்களுக்கு தான் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நல வாரியத்தின் மூலம் ரூ.4 கோடியே 37 லட்சம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. துாய்மைப்பணியாளருக்கு வேலை பளு அதிகமாக இருக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். பற்றாக்குறை வரக்கூடாது என்பதற்காக ஊரக பகுதிகளில் அதிகப்படியாக 707 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக துாய்மைப்பணியாளர்களை நியமிக்கும் அதிகாரம் கலெக்டருக்கு உள்ளது.நிரந்தர துாய்மைப் பணியாளர்களுக்கு பணி ஓய்வு பணம் வரவில்லை என்றால் கலெக்டரிடம் மனுவாக கொடுத்து பெறலாம். பருவ மழை காரணமாக ஒரு மாதத்திற்குள் அனைத்து கால்வாய்களையும் துார்வார உத்தரவிடப்பட்டுள்ளது. அக். 15 க்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். துாய்மைப் பணியாளர்களுக்கு விரைவில் 2 உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்றார்.