உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சஷ்டி சிறப்பு வழிபாடு

சஷ்டி சிறப்பு வழிபாடு

ரெட்டியார்சத்திரம்: வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீராமபுரம் அருகே ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் மூலவர், ஜலகண்டேஸ்வரர், விநாயகர், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. கோயில் நுழைவாயிலில் உள்ள 18 அடி உயர கருப்பண சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், தருமத்துப்பட்டி ராமலிங்க சுவாமி கோயில், திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில், காமாட்சி மவுனகுருசாமி மடம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை