உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. மாணவர்கள் தேஜஸ், கீர்த்தனாஸ்ரீ வரவேற்றனர். பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள் தலைமை வகித்தனர். பள்ளி செயலாளர்கள் மங்களம் காயத்ரி மங்கள் ராம் முன்னிலை வகித்தனர். பழநி சப் கலெக்டர் கிஷன் குமார் பேசினார். பள்ளிச் செயலர் பட்டாபிராமன் அவருக்கு நினைவு பரிசினை வழங்கினார். முன்னாள் மாணவர் டாக்டர் ராஜராஜன் தங்கராஜ் பங்கேற்றார். பள்ளி முதல்வர் சவும்யா ஆண்டறிக்கை வாசித்தார். பொதுத் தேர்வுகள், ஜே.இ. இ., ஐ.ஐ.டி., நீட் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள்,ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவன் சஞ்சய் அழகப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை