அறிவியல் கருத்தரங்கு
திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி , அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவும் இணைந்து தொழில்நுட்ப ஆசிரியர்களின் திறனை வளர்ப்பதற்கு ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம் பசுமையான தகவல் தொடர்புகளை மேம்படுதல்நிலையான ஆப்டிகல் வயர்லஸ் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி முன்னோக்குகள் என்ற தலைப்பில் டிச. 9 ல் தொடங்கி 14 வரை நடக்கிறது. திருச்சி என்.ஐ.டி., பேராசிரியர் ஸ்ரீராம் தொடங்கி வைத்தார். எஸ்.எஸ்.எம்., கல்லுாரி முதல்வர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் துறைத் தலைவர் கார்த்திகை லட்சுமி , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா வரவேற்றனர்.