மேலும் செய்திகள்
ஆயுஷ் விழிப்புணர்வு கூட்டம்
01-Sep-2024
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு,கண்காணிப்பு மையம் திண்டுக்கல் பண்ணை பார்மசி கல்லுாரி இணைந்து தேசிய ஆயுஷ் மருந்து பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை அனுசரிக்கும் விதமாக பண்ணை கல்லுாரியில் கருத்தரங்கம் நடத்தியது .திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து ஆய்வாளரும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலருமான சிவக்குமார்,மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன்,ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை மருத்துவர் பாலமுருகன் பேசினர்.400 மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். பண்ணை பார்மசி காலேஜ் சேர்மன் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பண்ணை பாரத் நிவாஸ் முதல்வர் கணேசன் , வைஸ் சேர்மன் ஸ்ரீனிவாஸ் நிரஞ்சன், தலைமை செயல் அலுவலர் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
01-Sep-2024