உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் நிழற்கூரை

 ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் நிழற்கூரை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் தினமலர் செய்தி எதிரொலியாக ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் நிழற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இது போல் வெளியூர் செல்வதற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். வெளியூர் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் மேற்கு பகுதியில் பயணிகளை ஏற்றி செல்கின்றன. நிழற் கூரை இல்லாததால் பயணிகள் வெயில் ,மழையில் நனைந்து பஸ் ஏறி செல்லும் நிலையில் உள்ளனர். பஸ் பயணிகளின் வசதிக்காக இப்பகுதியில் நிழற்கூரை அமைக்க தினமலர் நாளிதழில் பலமுறை செய்திகள் வெளியாகின. இதன் எதிரொலியாக தற்போது ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் நிழற் கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !