உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கடையில் திருடும் வீடியோ வைரல்

கடையில் திருடும் வீடியோ வைரல்

பழநி: பழநி திருவள்ளுவர் சாலை பகுதியில் கணேசன் 37, டீக்கடை நடத்தி வருகிறார் .இவர் கடை அருகே விஜயகுமார் டீக்கடை நடத்தி வருகிறார் . சில நாட்களுக்கு முன்பு இருவர் கடைகளிலும் உள்ள பணப்பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த கண்காணிப்பு கேமரா வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .வீடியோவில் கல்லாப்பெட்டியை ஸ்க்ரூடிரைவர் உதவியுடன் உடைத்து பணத்தை எடுத்து செல்வது போன்ற வீடியோ வைரலாகிறது. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை