உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  போலீஸ்காரரை கைது செய்ய முற்றுகை

 போலீஸ்காரரை கைது செய்ய முற்றுகை

திண்டுக்கல்: சாணார்பட்டி கோட்டைக்காரன்பட்டி மக்கள் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு கோயில் நிதி ரூ.5 லட்சத்தை திருப்பித்தராத போலீஸ்காரர், அவரது மனைவியைகைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகையிட்டு மனு அளித்தனர். கோட்டைக்காரன்பட்டி ஒத்தக்கடையை சேர்ந்த சிவக்குமார் 43, தலைமையில் ஊர் பொது மக்கள் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அதில், எங்கள் ஊரை சேர்ந்த சக்திமுருகன், அவரது மனைவி வைரலட்சுமி இருவரும் போலீசில் பணிபுரிகின்றனர். அவர்கள் கோயில் பணம் ரூ.5 லட்சத்தை பெற்றுக் கொண்டு அசல், வட்டியை செலுத்தாமல் இருந்தனர். அதை நானும் மற்ற ஊர் முக்கியமானவர்கள் இணைந்து பணத்தை தர வலியுறுத்தினோம். அதற்கு பணத்தை திருப்பி தரமுடியாது. நாங்கள் போலீஸ் என மிரட்டி எங்களையும், மற்ற நபர்களையும் தாக்கி காயம் ஏற்படுத்தினர். சாணார்பட்டி போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இருவரையும் கைது செய்து பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறு கேட்டிருந்தனர். ஏ.டி.எஸ்.பி., ரமேஷ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை