திறன் வளர்ப்பு பயிற்சி
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு தொழிற்கல்வி மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. 3 குழுக்களாக 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் வத்தலக்குண்டு தனியார் டூவீலர் விற்பனை, பழுதுபார்க்கும் நிறுவனங்களுக்கு சென்று நேரடி தொழிற்பயிற்சி பெற்றனர். தலைமையாசிரியர் தீபா, தொழிற்கல்வி ஆசிரியர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.