உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பா.ஜ., குறித்து அவதுாறு ; தி.மு.க., பிரமுகர் நிறுவனம் முற்றுகை

பா.ஜ., குறித்து அவதுாறு ; தி.மு.க., பிரமுகர் நிறுவனம் முற்றுகை

கொடைக்கானல் : பா.ஜ., தலைவர்கள் ,ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் முகநுாலில் பதிவிட்ட தி.மு.க.,வைச் சேர்ந்தவரை பா.ஜ.,வினர் முற்றுகையிட்டு கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் மறியலில் ஈடுபட்டனர்.கொடைக்கானலை சேர்ந்தவர் ஏசு ராஜா குட்டி .இவர் தனியார் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். பா.ஜ., முக்கிய தலைவர்களையும், ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் முகநுாலில் பதிவிட்டுள்ளார். ஆத்திரமடைந்த பா.ஜ.,வினர் கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் உள்ள அவரது கடையை முற்றுகையிட்டப்படி நேற்றிரவு 2 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் ஏசு ராஜா குட்டியை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்