உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவருக்கு குண்டாஸ்

ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவருக்கு குண்டாஸ்

திண்டுக்கல்,: ஒட்டன்சத்திரம், லக்கையன்கோட்டை பகுதியில் மே 13ல் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் 41, பொள்ளாச்சி பட்டத்தரசன் 34 ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., செல்வகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் ஆனந்தராஜை குண்டாஸில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட சிறையிலிருந்த அவர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ