உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி முருகன் கோயிலில் சிற்றுண்டி அன்னதானம்

பழநி முருகன் கோயிலில் சிற்றுண்டி அன்னதானம்

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் சிற்றுண்டி அன்னதானம் துவக்கப்பட்டுள்ளது.இக்கோயிலில் நாள் முழுதும் அன்னதான திட்டம் தினமும் நடக்கிறது. இதன் மூலம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். அன்னதானத்தில் உணவருந்த வரிசையில் காத்திருக்கும் நிலையும் உள்ளது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று (ஏப்.,1) முதல் ஜூன் 10 வரை திருக்கல்யாண மண்டபத்தில் சிற்றுண்டி அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் கலவை சாதம், புளியோதரை, தயிர் சாதம் வழங்கப்படுகிறது. இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ் அன்னதானம் வழங்கி துவங்கினர். உபயதாரர் மூலம் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் கோயில் வளாகத்தில் அமர்ந்து சாப்பிடலாம். தினமும் காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை மூவாயிரம் பக்தர்களுக்கு சிற்றுண்டி அன்னதானம் வழங்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ