மேலும் செய்திகள்
ஒர்க் ஷாப்பில் தீ விபத்து 10 கார்கள் கருகி நாசம்
16-Mar-2025
கள்ளிமந்தையம்: தந்தையின் இறுதிச் சடங்கின் போது சோகத்தில் இருந்த மகன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். காப்பாற்ற சென்ற இருவர் உட்பட மூவரையும் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.கள்ளிமந்தையம் அருகே அரண்மனைவலசை சேர்ந்தவர் முருகானந்தம் 50. மூன்று நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி, இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அரவிந்தன் 19, பொறியியல் கல்லுாரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.தந்தை இறந்ததிலிருந்து சோகத்துடன் காணப்பட்ட நிலையில் மூன்றாம் நாளான நேற்று இறுதி சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. சோகத்துடன் இருந்த அரவிந்தன் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்க உறவினர்கள் பொன்ராஜ், ஆறுமுகம் கிணற்றில் குதித்தனர். மூவரும் கிணற்றின் மோட்டார் குழாயை பிடித்தபடி மேலே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் மூவரையும் மீட்டனர். காயமடைந்த அரவிந்தன் தனியார் மருத்துவமனையில் உள்ளார்.
16-Mar-2025