உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பரிதவிப்பு: வணிக வளாகங்களில் இல்லை பார்க்கிங் வசதி: ரோட்டோரம் நிற்கும் வாகனங்களால் இடையூறு

பரிதவிப்பு: வணிக வளாகங்களில் இல்லை பார்க்கிங் வசதி: ரோட்டோரம் நிற்கும் வாகனங்களால் இடையூறு

மாவட்டத்தை பொறுத்தமட்டில் விவசாயம், ஆன்மிகம், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.இதை மையப்படுத்தி ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஊரக உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி கட்டமைக்கப்படும் வணிக நிறுவனங்களுக்கு பார்க்கிங் வசதி செய்யப்பட வேண்டும் என்பது கட்டுமான விதிமுறைகளில் உள்ளது.இவற்றை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக கையாளாமல் பார்க்கிங் வசதியின்றி வணிக நிறுவனங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கி உள்ளது . இதையடுத்து ரோட்டோரம் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி ஏற்படுத்தாத நிலையில் போக்குவரத்து ரோட்டை பயன்படுத்தும் அவலம் உள்ளது. இதனால் நாள்தோறும் மாவட்டத்தில் நகர்பகுதிகளில் போக்குவரத்து இடையூறு என்பது தொடர்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளும் வணிக நிறுவனங்களின் இத்தகைய போக்கின் மீது கண்டிப்பு காட்டாமல் உள்ளது.இதனால் நாள்தோறும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இத்தகைய போக்கை தவிர்க்க வணிக நிறுவனங்களில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை