உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

நிலக்கோட்டை: வாக்காளர் பட்டியலில் தொடர்ச்சியான இடமாற்றம், ஒரே வாக்காளர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது, இறந்தவர்கள் நீக்கப் படாதது மற்றும் வெளி நாட்டவர்களின் தவறான சேர்ப்பு ஆகிய காரணங்களால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தமானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் மற்றும் நிலக்கோட்டை வாக்காளர் பதிவு அலுவலர் சுகுமார் தலைமையில் 271 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த சிறப்பு தீவிர திருத்தம் நாளை முதல் (நவ.4) தொடங்குகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப். 7ல் வெளி யிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !