உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் சிறப்பு தரிசனம்

கோயில்களில் சிறப்பு தரிசனம்

பழநி: பழநி கோயில்களில் தீபாவளியை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பழநி முருகன் கோயில், திரு ஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில் அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பழநி சண்முகபுரம் சித்தி விநாயகர் கோயிலில் ரூ.10, ரூ.20 ரூபாய் நோட்டுகளால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை