உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேகமாக செல்லும் தனியார் பஸ்களால்  அச்சம்: கட்டுப்படுத்த தேவை வேகக்கட்டுப்பாடு

வேகமாக செல்லும் தனியார் பஸ்களால்  அச்சம்: கட்டுப்படுத்த தேவை வேகக்கட்டுப்பாடு

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து, கிராமம், நகர்ப்புறங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை, மாலையில் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள் ,வேலைக்கு செல்வோர் அதிகரித்ததால் போதிய ஓய்வு நேரமின்றி தனியார் பஸ்கள் அதி வேகத்தில் இயங்கிவருகிறது. பல தனியார் பஸ்களில் முகப்பு விளக்குகளை பகல் நேரத்தில் ஒளிர விட்டபடி வழித்தடத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட், கிராம பஸ் ஸ்டாப்களில் நிற்காமல் அதிவேகத்தில் செல்கின்றனர். குறித்த நேரமில்லாமல் அதிவேகமாக செல்லும் பஸ்களால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்பு , உடல் ஊனமும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தனியார் பஸ்கள் ஒரு டிரிப் பிற்கும், மற்றொரு டிரிப்பிறகும் ஒரு மணி நேர இடைவெளி இருக்கும் வகையில் நேர அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். இதேபோல் அரசு ,தனியார் பஸ்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தி வேகத்தை குறைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ