மாநில அளவிலான செஸ் போட்டி
-திண்டுக்கல்,: திண்டுக்கல் மதுரை ரோடு, விஸ்டம் சிட்டி பார்வதி அனுகிரஹா பள்ளியில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான செஸ் போட்டி கடந்த 14ல் துவங்கி நேற்று வரை நடந்தது.தமிழ்நாடு செஸ் கழகம், திண்டுக்கல் மாவட்ட செஸ் கழகம் சார்பில் ஆனந்த் செஸ் அகாடமி இப்போட்டியை நடத்தியது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 9 சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பிரிவில் சென்னை ஹரிதேவ் (8 புள்ளிகள்), திருவள்ளூர் இனியன் (8), விழுப்புரம் கோகுல் (7.5), ராணிப்பேட்டை தர்ஷன் (7.5) ஆகியோர் முதல் 4 இடங்களைப் பெற்றனர்.மாணவிகள் பிரிவில் சென்னை சண்மதிஸ்ரீ (7.5 புள்ளிகள்), சென்னை நிவேதிதா (7.5), சென்னை தீபிகா (7.5 புள்ளிகள்), திருவள்ளூர் சகானா பிரியா (7 புள்ளிகள்) ஆகியோர் முதல் 4 இடங்களைப் பெற்றனர். இவர்கள் தமிழ்நாடு செஸ் கழகம் சார்பில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். அவர்களை போட்டி ஏற்பாட்டாளர்கள் பாராட்டினர்.