உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டாக்டர் பட்டத்திற்கு அடிமையாகாதீர் நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாநில தலைவர் அறிவுரை

டாக்டர் பட்டத்திற்கு அடிமையாகாதீர் நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாநில தலைவர் அறிவுரை

எரியோடு : ''கவுரவ டாக்டர் பட்டத்திற்கு அடிமையாக வேண்டாம்'' என தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாநில தலைவர் சத்தியராஜ் கூறினார்.எரியோட்டில் நடந்த கலை விழா மாநாட்டில் அவர் பேசியதாவது: 58 வயது நிறைந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் பெறும் வழிமுறையை எளிதாக்க வேண்டும். பெண்கள் கலைஞர்களுக்கான ஓய்வூதிய வயதை 50 ஆக குறைக்க வேண்டும். கேடயம், கவரவ டாக்டர் பட்டம் தருகிறோம் என இடைதரகர்கள் பலர் நாட்டுப்புற கலைஞர்களை தொடர்பு கொண்டு பணம் வசூலிக்கின்றனர்.ரூ.10 ஆயிரத்திற்கு கூட கவுரவ டாக்டர் தருகிறோம் என்கின்றனர். இத்தகைய பட்டத்திற்கு அடிமையாகக வேண்டும். அந்த பட்டத்தை வைத்து கிளினிக் நடத்தவா முடியும்.மிகுந்த சிரமப்பட்டு கடும் உழைப்பை தந்து சம்பாதிக்கும் பணத்தை எதற்கும் உதவாத பட்டங்களுக்காக வீணாக்க வேண்டாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை