சைக்கிளிங் போட்டியில் சாதித்த மாணவர்கள்
வேடசந்துார்; திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான சைக்கிளிங் (சாலை மிதிவண்டி) போட்டிகளை சிறுமலை பிரிவில் மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் ரகமத்கனி துவக்கி வைத்தார். இதில் கோ.இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 6 பிரிவுகளில் விளையாடி 5 பிரிவுகளில் முதல் இடம், 2 பிரிவுகளில் இரண்டாம் இடம், ஒரு பிரிவில் மூன்றாவது இடம் பிடித்தனர்.5 மாணவர்கள் அடுத்த மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ஆனந்தன், உதவி தலைமை ஆசிரியர்கள் வீரமணி, முத்துமீனாள், விளையாட்டு ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில் வடிவு, சத்தியஜோதி பாராட்டினர்.