உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் அவதி

அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் அவதி

செம்பட்டி : கன்னிவாடி, செம்பட்டி, சித்தையன்கோட்டை, சின்னாளபட்டி பகுதியில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் சில இடங்களில் மட்டும் லேசான சாரல் இருந்தது. போதிய மழையின்றி, பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பரவலாக காலை 8 மணிக்கு துவங்கும் வெயிலின் வெம்மையான சூழல், இரவு 7 வரை நீடிக்கிறது. வெம்மையின் பாதிப்பால், பகலில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறையத் துவங்கியுள்ளது. சில இடங்களில் 3 நாட்களாக மாலை நேரங்களில் மேகமூட்டம் சூழ்ந்து பலத்த சூறாவளி வீசுகிறது. கன்னிவாடி, கரிசல்பட்டி, என்.பஞ்சம்பட்டி, குட்டத்துப்பட்டி, சித்தையன்கோட்டை, வக்கம்பட்டி, வீரக்கல், தருமத்துப்பட்டி பகுதிகளில் அக்னி நட்சத்திர காலம் கடந்து 4 மாதங்களாகியும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. பகல் மட்டுமின்றி இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையும், வெப்பச்சூழலும் மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி