உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாய பயிர்களை பாழ்படுத்தும் காட்டுப்பன்றிகள் பெரும் பாதிப்பில் கரும்பு, மரவள்ளி கிழங்கு விவசாயிகள்

விவசாய பயிர்களை பாழ்படுத்தும் காட்டுப்பன்றிகள் பெரும் பாதிப்பில் கரும்பு, மரவள்ளி கிழங்கு விவசாயிகள்

நிலக்கோட்டை: சிலுக்குவார்பட்டி அருகே மரவள்ளி கிழங்கு ,கரும்பு போன்றவற்றை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கின்றனர். சிலுக்குவார்பட்டி ஊராட்சி ,அதனை சுற்றிய கிராமங்களில் கரும்பு, மரவள்ளி கிழங்கு , மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சில நாட்களாக மரவள்ளி கிழங்கு, கரும்பு போன்றவற்றை இரவு நேரத்தில் காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கின்றனர். மரவள்ளி கிழங்கு விவசாயிகள் ராஜாராம், ஜோதி கூறுகையில், 'மூன்றரை ஏக்கருக்கு மரவள்ளி கிழங்கு விவசாயம் செய்துள்ளோம். கொரோனா காலத்தில் மிகவும் பாதிப்படைந்து தற்போது மீண்டு வரும் நிலையில் இரவு நேரத்தில் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் என்ன செய்வதென தெரியாமல் திகைக்கிறோம் ' என்றனர். கரும்பு விவசாயிகள் சாமி முத்து, டென்னிசன் கூறுகையில், '10 ஏக்கர் கரும்பு தோட்டங்களில் விளையும் கரும்புகளை மதுரை வெல்லமண்டிக்கு அனுப்பி வருகிறோம். சில நாட்களாக காட்டுப் பன்றிகள் அட்டகாசத்தால் கரும்புகளை கழிவுகளாக விறகுக்கு பயன்படுத்தும் நிலை உள்ளது' என்றனர். விவசாயிகள் சங்க நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் காசிமாயன் கூறும்போது,'' வனத்துறையிடம் புகார் செய்தபின் கண்துடைப்பாக வந்து பார்த்துவிட்டு சென்றார்கள். பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண தொகை , மரவள்ளிகிழங்கு விவசாயிகளுக்கு 40 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு அரசு உத்தரவிட்ட பிறகும் ஏன் தயங்குகிறார்கள் என தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முன்வர வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை