உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குருத்தோலை ஞாயிறு பவனி

குருத்தோலை ஞாயிறு பவனி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சர்ச்களில் குருத்தோலை ஞாயிறு பவனி, சிறப்பு திருப்பலி நடந்தது.திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பவுல் சர்ச்சில் புனித வாரத்தில் துவக்க நாளான குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி பாதிரியார்கள் தாமஸ் பால்சாமி, மரிய இன்னாசி தலைமையில் நடந்தது. இதில் குருத்தோலைகளை ஏந்தியபடி மக்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். தொடர்ந்து திருப்பலி நடந்தது. மரியநாதபுரம் விண்ணேற்பு அன்னை சர்ச்சில் பாதிரியார் சவுந்தர்ராஜன் தலைமையில் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதேபோல், குமரன் திருநகர், என்.ஜி.ஓ., காலனி, மார்கெட் குமரன் தெரு, முத்தழகுபட்டி, மேட்டுப்பட்டி, வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, பஞ்சம்பட்டி பகுதிகளில் உள்ள சர்ச்சிகளில் குருத்தோலை பவனி, சிறப்பு திருப்பலி நடந்தது.கன்னிவாடி : குட்டத்துப்பட்டி புனித அந்தோணியார் சர்ச்சில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பாதிரியார் சவுந்தர் தலைமையில் சிறப்பு திருப்பலி கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. ஓசானா பாடியபடி ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் ஊர்வலம் சென்றனர்.கு.ஆவரம்பட்டி புனித சவேரியார் சர்ச்சில் பாதிரியார் நெப்போலியன் விழா திருப்பலி நிறைவேற்றினார்.ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்தூர், வக்கம்பட்டி, கன்னிவாடி, காரமடை, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, எம்.அம்மாபட்டி உள்ளிட்ட இடங்களிலும் குருத்தோலை விழா நடந்தது.நத்தம் : செந்துறை புனித சூசையப்பர் சர்ச்சில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. பாதிரியார்கள் இன்னாசிமுத்து, மைக்கேல்,மரிய பிரான்சிஸ் பிரிட்டோ ஆகியோர் தலைமை வகித்தனர். ஏராளமான கிறிஸ்தவர்கள் தென்னங்கீற்றுகளால் ஆன ஒலையை கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை