வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த அவலம் எல்லா தமிழ்நாட்டின் பஸ் ஸ்டாண்டிலும்தான் உள்ளது. . ஒழியட்டும் இவர்களை ஆட்டம்.
---மாவட்டத்தில் உள்ள பஸ்ஸ்டாண்ட்களில் நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். ஆக்கிரமிப்பு காரணமாக டவுன் பஸ்கள் நிற்கும் இடத்திலிருந்து வெளியூர் செல்லும்பஸ்கள் நிற்கும் இடத்திற்கு செல்வதற்கு பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இங்குள்ள நடைபாதையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை காட்டிலும் சில அடிகள் அதிகரித்து கடைகளை பரப்பி விடுகின்றனர். வேகமாக சென்று பஸ்ஸை பிடிக்கும் நிலையில் உள்ள பயணிகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். பல இடங்களில் பஸ் ஸ்டாண்டின் அடுத்த பகுதிக்கு செல்லும் வழி எங்கு உள்ளது என தேடி கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. அந்த அளவிற்கு சிறு வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சில கடைகளில் நடைபாதைகளில் நாற்காலிகளை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். பல பஸ் ஸ்டாண்ட்களில் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் பயணிகள் பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது. இந்த இடங்களில் நிழற் கூரை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அவலம் எல்லா தமிழ்நாட்டின் பஸ் ஸ்டாண்டிலும்தான் உள்ளது. . ஒழியட்டும் இவர்களை ஆட்டம்.