மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது
14-Apr-2025
திண்டுக்கல் : வத்தலக்குண்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருப்பவர்களிடம் குறைகளை கேட்டறிந்தும், தோட்டனுாத்துவில் வசிக்கும் 321 வீடுகளைச் சேர்ந்த 876 பேரின் சுய விவரங்கள் அனைத்தையும்இணையத் தளத்தில் பதிவேற்றும் பணிகளையும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மைய கமிஷனர் வள்ளலார் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது: முகாம்களில் உள்ள பட்டதாரிகள், பொறியாளர்கள், மருத்துவம் படித்தவர்களுக்கு தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகளில் வேலை வாய்ப்புகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பயிற்சிகள் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
14-Apr-2025