மேலும் செய்திகள்
கல்குவாரிக்கு எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம்
27-Sep-2024
திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் ஆர்.எஸ்.ரோடு பகுதியிலிருக்கும் டாஸ்மாக்கை இடமாற்றக்கோரி அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் நாகல்நகர் ஆர்.எஸ்.ரோடு குடியிருப்பு பகுதி அருகே டாஸ்மாக் நீண்ட நாட்களாக செயல்படுகிறது. அப்பகுதியில் மாலை,இரவு நேரங்களில் பெண்கள்,குழந்தைகள் நடமாட முடியவில்லை. குடிமகன்கள் இரவு நேரத்தில் வீட்டு சுவர்களில் மதுபாட்டில் ஸ்டிக்கர்களை ஒட்டி செல்கின்றனர். 36வது வார்டு பகுதி மக்கள் பல முறை மாநகராட்சி,டாஸ்மாக்,மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தபோதிலும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை . நேற்று காலை 11;45 மணிக்கு நாகல்நகர் 36 வது வார்டை சேர்ந்த ஆண்கள்,பெண்கள் என 50க்கு மேலானோர் டாஸ்மாக் கடை முன் முற்றுகையிட்டனர். மதியம் 12:00 மணிக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்க வர அவர்களுக்கும் பொது மக்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. மேற்கு இன்ஸ்பெக்டர் வினோதா,டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்க கலைந்தனர்.
27-Sep-2024