மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம்
18-Jan-2025
நத்தம்: நத்தம் பகுதியில் அனுமதியில்லாமல் இயங்கும் கல்குவாரிகளை உடனடியாக மூடக் கோரி தாலுகா அலுவலகம் அருகில் தமிழர்தேசம் கட்சி சார்பில் வாயில் கருப்புத் துணி கட்டி காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரபுஅம்பலம் தலைமை வகித்தார். மாநில மாணவரணி செயலாளர் பூமி அம்பலம், மாநில அமைப்பு செயலாளர் மகுடேஸ்வரன், மாநில செயலாளர் அழகர், வடக்கு மாவட்ட செயலாளர் ஆண்டிஅம்பலம் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மண்டல புவியியல் , சுரங்கத்துறை உதவி இயக்குநர் செல்வசேகர், தாசில்தார் பாண்டியராஜ், இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்குவாரிகளில் ஆய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
18-Jan-2025