உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆசிரியருக்கு கத்தி குத்து; இருவர் கைது

 ஆசிரியருக்கு கத்தி குத்து; இருவர் கைது

வடமதுரை: கம்பிளியம்பட்டி அம்மாபட்டியை சேர்ந்த நீலராஜா 37, அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்தபோது அதே பகுதி பழனிக்குமார் 36 ,தொடர்ந்து புகார் தந்து வந்ததால் நீக்கப்பட்டார். இதனால் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில் எஸ்.குரும்பபட்டி ஓட்டலில் பழனிக்குமாருக்கும் நண்பர் மோகனகிருஷ்ணன் 28, உடன் வந்த நீலராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பும் தாக்கி கொண்டனர். கத்தியால் நீலராஜா குத்தப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு வழக்குகளாக பதிந்த வடமதுரை போலீசார் பழனிக்குமார், மோகன கிருஷ்ணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ