உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குழந்தை பெற்ற பள்ளி சிறுமி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

குழந்தை பெற்ற பள்ளி சிறுமி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம், பள்ளிக்கு சென்ற மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அந்த மாணவியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. மாணவிக்கு குழந்தை பிறந்ததால், இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் விசாரணை மேற்கொண்டது. இதில், கடந்தாண்டு, ராசிபுரத்தில் உள்ள தன் சித்தி வீட்டில் தங்கியிருந்த மாணவியை, சித்தி மகனான 28 வயது வாலிபர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார்.தற்போது, கர்ப்பமானது தெரியாமல் இருந்த மாணவிக்கு, 10வது மாதமான, நேற்று முன்தினம் குழந்தை பிறந்தது தெரியவந்தது. ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார், 28 வயது வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R SRINIVASAN
நவ 09, 2024 22:23

தமிழ் நாட்டில் படித்து முன்னேறவேண்டும் என்ற அக்கறை மாணவ மாணவிகளுக்கு இல்லை. மாணவ மாணவிகளுக்கு ஒழுக்கத்தை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும் .பழைய நாட்களில் இராமாயணத்தில் சகோதரர்கள் எவ்வளவு இணக்கமாக வாழ்ந்தார்கள் என்பது எடுத்துக்காட்டப்பட்டது . பகுத்தறிவால் மக்களுக்கு தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை