உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை: வடமதுரை பாகாநத்தத்தில் 18 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்தது. பின் நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. குண்டாம்பட்டி ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வர் கோயில் அர்ச்சகர் சுப்பிரமணி குருக்கள் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். சுற்று வட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ