உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் உற்ஸவ திருவிழா

கோயில் உற்ஸவ திருவிழா

குஜிலியம்பாறை: உல்லியக்கோட்டை ஊராட்சி மணியகாரன்பட்டியில், விநாயகர், பெரியகாண்டியம்மன், முருகன், பொன்னர் சங்கர் உள்ளிட்ட கோயில்களின் கழுகு நாடு குல பங்காளிகள் உற்ஸவ திருவிழா நடந்தது. இதில் கரகம் பாலித்தல், கரூர் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் அழைத்தல், வான வேடிக்கை, சுவாமி அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அம்மன் மஞ்சள் நீராட்டுடன் பூஞ்சோலை சென்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ