தாடிக்கொம்பு பெருமாள் கோயில் ஆடித்தேரோட்டம்
திண்டுக்கல்,: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பெரும் திருவிழா ஆக. 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வெவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடக்க ஆக. 7ல் திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி உட்பட ஊர் முக்கியஸ்தர்கள் தொடங்கி வைத்தனர். நாளை மாலை தெப்ப உற்ஸவம் நடைபெறுகிறது. அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக், கோயில் செயல் அலுவலர் யுவராஜ் ,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வாசுதேவன், சுசீலா, கேப்டன் பிரபாகரன், ராமானுஜம் கலந்து கொண்டனர்.