உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / யானையை வனத்துக்குள் அனுப்பிய வனத்துறை

யானையை வனத்துக்குள் அனுப்பிய வனத்துறை

பாலசமுத்திரம : பழநி பாலசமுத்திரம் பேரூராட்சி பொருந்தல் கிராமத்தில் பாலாறு, பொருந்தலாறு அணை பகுதி அருகே பொதுமக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு அக்.5 இரவு பொருந்தல் பகுதி வயல்வெளியில் காட்டு யானை புகுந்தது. இரவில் வரும் யானை விடிவதற்குள் காட்டுக்குள் சென்று விடும். இந்த யானை மீன்வளத்துறை கட்டட வளாகத்தில் சுற்றி திரிந்தது. வனச்சரகர் கோகுலக்கண்ணன், வனவர் பழனிச்சாமி முன்னிலையில் வனத்துறையினர் 15 பேர் வாகனத்தில் ஒலி எழுப்பி காட்டுக்குள் அனுப்ப முயற்சி செய்தனர். ஆனால் காட்டுக்குள் சொல்லாமல் பாலாறு பொருந்தலாற்றில் தஞ்சம் அடைந்தது. கிராமத்திற்குள் செல்லாமல் தடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்ட நிலையில் பாதுகாப்பான முறையில் காட்டுக்குள் அனுப்பினர். வனப்பகுதியில் இருந்து யானை போன்ற வனவிலங்குகள் வெளியேறினால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். யானையை எரிச்சலூட்டும் வகையில் செல்பி எடுப்பது, கூட்டமாக கூடி சத்தம் எழுப்புவது, பட்டாசுகளுக்கு வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ